ரத்தன் டாடா(ஓர் இந்தியக் கனவு)
ரத்தன் டாடா(ஓர் இந்தியக் கனவு)
பெரிய பணக்காரரான ரத்தன் டாடா பெரும் வெற்றிகள் பெற்று மிக நிம்மதியாக இருந்திருப்பார் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், சுப மீனாட்சி சுந்தரம் எழுதியிருக்கிற ரத்தன் டாடா குறித்த இந்தப் புத்தகத்தைப் படிக்கிற போது, ரத்தன் டாடா சாதித்த வெற்றிகளைக் காட்டிலும் சந்தித்த சவால்கள் அதிகம் என்று தெரியவருகிறது. அந்த விதத்தில், ரத்தன் டாடாவின் வெற்றிகளையும் சாதனைகளையும் மட்டுமல்ல; அவர் செய்த மாற்றங்களையும், அதன் பொருட்டுச் சந்தித்த சவால்களையும் போராட்டங்களையும், அவற்றில் கண்ட தோல்விகளையும் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கிறது இந்தப் புத்தகம். எளிய நடையில் நிறையத் தகவல்களோடு இருக்கிற இந்தப் புத்தகத்தை, இளைஞர்களும் வியாபாரம் செய்பவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.
- எழுத்தாளர் சோம.வள்ளியப்பன்
***
ரத்தன் டாடா - இந்தியத் தொழிற்துறையின் அசைக்க முடியாத மன்னனாகத் திகழ்ந்தவர். டாடா குழுமத்தைச் சர்வதேச நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரியவர். ‘From salt to software’ - அதாவது உப்பு உற்பத்தியிலிருந்து மென்பொருள் நிறுவனம் வரை டாடா குழுமம் கால் பதிக்காத துறையே இல்லை. இந்தச் சாதனைகள் அனைத்திற்கும் ரத்தன் டாடாவின் தலைமைப் பண்பும், நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும், கடின உழைப்பும், மனித நேயத்துடன் கூடிய நிர்வாகத் திறனும்தான் காரணங்கள். அந்த மாமனிதரின் வாழ்வையும், டாடா குழுமம் சந்தித்த சாதனைகளையும் சோதனைகளையும் இந்தப் புத்தகத்தில் சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளார் சுப மீனாட்சி சுந்தரம்.
ரத்தன் டாடா(ஓர் இந்தியக் கனவு) - Product Reviews
No reviews available

