இராஜசேகரன்

0 reviews  

Author: உதயணன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  700.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இராஜசேகரன்

குப்தர்களின் அரசை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று இந்திய வரலாற்றின் பொற்காலத்தைக் காணச் செய்தவர் சமுத்திரகுப்தர். அவர் வீரத்திலும் விவேகத்திலும் மட்டுமல்லாமல் இன்னும் பல துறைகளிலும் சிறந்தவராக விளங்கியவர். வடபாரதத்தின் பல பகுதிகளை போரிட்டு வென்ற இவரது பயணம் தெற்கே காஞ்சி வரை நிகழ்ந்தது. ராஜசேகரன் என்னும் சிறப்புப் பெயரை உடைய இம்மன்னனைப் பற்றிய வரலாற்றுத் தடங்களைக் கற்பனை கலந்து காட்டுவதே இந்த வரலாற்று நாவல்.

சந்திரகுப்தர் தனது ஐந்து மகன்களில் இளைய மகனான சமுத்திரகுப்தருக்கே ஆட்சியைக் கொடுக்கிறார். இது மற்ற நான்கு சகோதரர்களுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்துகிறது. சமுத்திர குப்தன் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்து விட்ட போதும் அவரது சகோதரர்களுக்கு மனத்தாங்கல் தீர்ந்தபாடில்லை. எப்படியாவது சமுத்திரகுப்தனை அழித்துத் தாங்கள் பட்டத்துக்கு வர வேண்டும் என்று முயல்கின்றனர்.

அதற்காக அவர்கள் நடத்தும் சூழ்ச்சியையும், சமுத்திரகுப்தனுக்குச் சுற்றி உள்ள பகை நகர்வுகளையும் இவற்றையெல்லாம் அவன் எவ்வாறு எதிர்கொண்டு மிகப்பெரிய குப்த சாம்ராஜ்யத்தை உருவாக்கினான் என்பதையும் குறித்துச் சுவைபட விவரிக்கிறது இந்நாவல்.

இராஜசேகரன் - Product Reviews


No reviews available