பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம்-2)

0 reviews  

Author: ந.பரணிகுமார்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம்-2)

பாராட்டுவது வேறு, புகழ்வது வேறு. ஒரு செயலின் விளைவுகள் பலருக்கும் நன்மை விளைவிக்குமானால் அந்தச் செயலைப் பாராட்டுவது சான்றோர் இயல்பு. ஆனால் தற்போதைய உலகியல் வாழ்வில், ஒருவரைப் புகழ்வது என்பது அவரால் ஏதேனும் நன்மை கிட்டுமா என்ற ஆழ்மன எதிர்பார்ப்பின் விளைவாகவே அமைகிறது.
சாதாரண மனிதரையே புகழ்ந்து பாடி, அவரால் ஆதாயம் பெற முயற்சிக்கும் நாம், நமக்கு எல்லாவற்றையும் அருளி, நம் வாழ்க்கையை நாமே நம் விருப்பம்போல சீரமைத்துக்கொள்ள உதவும் அந்தப் பரம்பொருளைத்தான் எப்படியெல்லாம்  போற்றிப் புகழ வேண்டும்!

இந்தப் புகழ்தல் இயல்பாகவே நம்முள் அமையவேண்டும். எதையும் எதிர்பார்த்து இறைவனைப் போற்றுதல் கூடாது என்று ஞானிகள் சொல்லலாம்; ஆனால் யாரிடம் போய்க் கேட்டால் என்ன உதவி கிடைக்கும் என்பதை அறிந்திருக்கக்கூடிய நமக்கு, யாரிடம் போனால் ஆறுதல் கிட்டும் என்ற நம்முடைய சாமானிய எதிர்பார்ப்புக்கு ஓர் வடிகால்தான் ஸ்லோகங்கள். நம் குறையை, நம் தேவையை, உற்றார், உறவினர், நண்பர்களிடம் சொன்னால், அது விமர்சிக்கப்படலாம்; தவிர்க்கப்படலாம்; சிலசமயம் உரிய உதவியும் கிடைக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல இறைவனிடம்போய் நம் குறையைச் சொல்லி அவரைப் போற்றித் துதித்தால் நம் மனம் தெளிவடைவதையும், குறையின் பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் வகையில் மனம் பக்குவம் அடைவதையும், அந்தக் குறையைப் போக்கிக்கொள்ளும் வழி தோன்றுவதையும், நமக்கு அந்த இறைவனே அருள்வதை அனுபவபூர்வமாக நம்மால் உணர முடியும்.

‘பலன் தரும் ஸ்லோகம் - இரண்டாம் பகுதி’ என்ற இந்த நூல் உங்களுக்கு அத்தகைய அனுபவத்தைத் தரும், ஆனந்தத்தைத் தரும், அற்புதங்களை நிகழ்த்தும்.

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம்-2) - Product Reviews


No reviews available