நாவல் வடிவில் உதயண குமார காவியம்
Price:
170.00
To order this product by phone : 73 73 73 77 42
நாவல் வடிவில் உதயண குமார காவியம்
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயண குமார காவியம் சதானிகன் என்னும் அரசனின் வரலாற்றையும் அவனது மகனாகிய உதயணன் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. உதயணன் நான்கு பெண்களை மணந்து இறுதியில் துறவு மேற்கொள்வதே இக்கதையின் சுருக்கம்.
அருகக் கடவுளின் மகிமையையும் அவர் அருளைப் பெற ஒருவர் புலனின்பங்களைத் துறந்து தவ வாழ்க்கை மேற்கொள்வதே சிறந்தது என்ற கருத்தையும் இந்தச் சமணக் காப்பியம் வலியுறுத்துகிறது.
உதயணன் தவ வாழ்க்கையை அடைவதற்கு முன்பாகப் புலனின்பங்களில் நாட்டம் கொண்டு அதையே சிறந்த வாழ்க்கை என்றெண்ணி உடலின்பம் துய்ப்பதையும், பின்னர் தவ வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதையும் விரிவாக இந்த நூல் பதிவு செய்கிறது.
மூல நூலின் தரம் குறையாமல் நாவல் வடிவில் இந்தக் காப்பியத்தை நமக்கு நாவல் வடிவில் தந்திருக்கிறார் ஜனனி ரமேஷ்.
நாவல் வடிவில் உதயண குமார காவியம் - Product Reviews
No reviews available

