நீதிக்கதைகள்
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
நீதிக்கதைகள்
தொண்ணூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் முதல் இரு பதிற்றாண்டுகளிலும் நவீன தமிழில் வலுவாக எழுந்த ‘பெண் கவிதை’யில் புதிய திசை வழியைக் காட்டும் தடப் பதிவு இந்தத் தொகுப்பு. பொன்முகலியின் இந்த மூன்றாவது தொகுப்பு அவரது அடையாளத்துக்கு வலிமையையும் பொலிவையும் சேர்க்கிறது.
இன்றைய தலைமுறை ‘பெண் கவிஞர்’களில் பொன்முகலி தன் இடத்தைத் தானே கண்டடைந்தவர். தனக்கே தனக்கான கவிமொழியை உருவாக்கிக்கொண்டவர். ஒழுக்கத்தின் பெயரால் சுமத்தப்பட்ட விதிகளைக் கேள்விக்குட்படுத்திப் பேசாப் பொருளில் பேசத் துணிந்தவர்.
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் காதலிலும் காமத்திலும் பெண் கொள்ளும் தற்களிப்பைப் பகிரங்கமாக விவரிக்கின்றன. பெண்ணுடல்மீது இதுவரையும் ஆண் கொண்டாடி வந்த திளைப்பை எள்ளி நகைக்கின்றன. பெண் சுயத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டுகின்றன.
நீதிக்கதைகள் - Product Reviews
No reviews available

