நீலமலைத் தொல்லியல்(பாறை ஓவியங்கள்,பெருங்கடற்படைச் சின்னங்கள்,பழங்குடி தொடர்புறவுகள்)
Author: சுதாகர் நல்லியப்பன், குமரவேல் இராமசாமி
Category: ஆய்வுக் கட்டுரை
Available - Shipped in 5-6 business days
நீலமலைத் தொல்லியல்(பாறை ஓவியங்கள்,பெருங்கடற்படைச் சின்னங்கள்,பழங்குடி தொடர்புறவுகள்)
முழுமையும் கள ஆய்வில் ஈஈடுபட்டு, முந்தைய ஆய்வு விளக்கங்களைப் படித்து ஏற்க வேண்டிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டும் மறுக்கவேண்டியதை மறுத்தும் இந்நூலை உருவாக்கி உள்ளனர். நீலமலைப் பெருங்கல்லறைகள், பாறை ஓவியங்கள் தொல்குடி மக்களுடன் கொண்டிருக்கும் பண்பாட்டின் பின்னணியை ஆய்வது தேவையான ஒன்று. அந்த வகையில் நீலமலையின் தொல்லியலை ஆய்வு செய்திருப்பது பயனுடையது.
- முனைவர் ர. பூங்குன்றன்
தொல்லியல் ஆய்வாளர்
தமிழ்நாட்டில் ஆறு அழிநிலைப் பழங்குடிச் சமூகத்தினரும் ஒருங்கே வாழும் நீலமலையின் தொல்லியல் சிறப்புகளை ஆய்வுசெய்ய வேண்டுமென்ற எண்ணமும் அதற்கான பெருமுயற்சியும் போற்றுதற்குரியதாகும். தொல்லியல் தரவுகள் மிக நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்நூலினை படித்து முடித்த பின்னர், நீலமலைக்கு நாம் செல்லும்போது, நமக்குக் கிடைக்கும் அனுபவம் நிச்சயம் புதுவிதமானதாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.
-தங்கம் தென்னரசு
மாண்புமிகு அமைச்சர் நிதி மற்றும் தொல்லியல் துறை
நீலமலைகளின் மீதான யாக்கைக் குழுவினரின் பயண அனுபவ விவரிப்புகள் மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை இலக்கியம் போல வாசகர்களை தொல்லியல் தேடலுக்கு ஆற்றுப்படுத்தும் தன்மைகொண்டது. தொல்லியல் இடங்களின் அமைவிட வரைபடமும், பல நுண் வகைமைகளில் ஒப்பிட்டுப் பட்டியலிடப்பட்டிருக்கும் அட்டவணைகளும், அளவீட்டுத்தாள் மற்றும் அளவீட்டுக் கோலுடன் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும், பாறை ஓவியங்களைத் தொழில்நுட்ப உதவியுடன் வரைந்து விளக்கப்படங்கள் கொண்டு விளக்கியிருப்பதும், நீலமலை ஓவியங்கள் குறித்த ஆய்வுச்சாரமும், சொல்லடைவும் இந்நூலின் பெருமதியாகும்.
-முனைவர் பாவெல் பாரதி
தொல்லியல் ஆய்வாளர்
நீலமலைத் தொல்லியல்(பாறை ஓவியங்கள்,பெருங்கடற்படைச் சின்னங்கள்,பழங்குடி தொடர்புறவுகள்) - Product Reviews
No reviews available

