நீலகிரி படகர்களின் தாவர வழக்காறுகள்
நீலகிரி படகர்களின் தாவர வழக்காறுகள்
வாழ்வாதாரம், உணவாதாரம். பாரம்பரிய கை மருத்துவம், வாழ்வியல் சடங்குகள், இறப்புச் சடங்குகள், பிற ஆசாரங்கள், கால்நடை வளர்ப்ப. முன்னோர் வழிபாடு. பிற தெய்வ வணக்கங்கள். வழிபாட்டு இசை எனப் படகர்களின் பண்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் தாவரங்கள் தவிர்க்க முடியாத குறியீடுகளாக விளங்குகின்றன. இவற்றை, ஆழ்கடலில் முத்தெடுப்பதுபோல் அரிய இனவரைவியல் எடுத்துரைப்பை இங்கு நம்முன் கொண்டு வந்துள்ளார் சுனில்ஜோகி. தாவர இனவரைவியலில் இந்நூல் முக்கியமானது எனலாம்.
முனைவர் பக்தவத்சல பாரதி
நீலகிரி மாவட்டம், பொறங்காடுசீமை, ஓரசோலைக் கிராமத்தைச் சார்ந்த முனைவர் கோ.சுனில்ஜோகி கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினமான மாதி', நீலகிரி படகர்கள் குறித்த முதல் சிறுகதைத் தொகுப்பான 'இணி'. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'பொட்டி' மற்றும் பக்தி, சிற்றிலக்கிய ஆய்வுக் தொகுப்பான பக்திமொழி உள்ளிட்ட, இவரின் நால் வரிசையில் ஐந்தாவது நூலாகவும், படகர்களின் தாவர வழக்காறுகள் குறிக்க முதல் நூலாகவும் இந்த 'நீலகிரி படகர்களின் தாவர வழக்காறுகள்' எனும் ஆய்வு நூல் திகழ்கின்றது. படகர், பழங்குடி வாழ்வியல் குறித்த 70 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 400 மேற்பட்ட கவிதைகள் உள்ளிட்ட ஆக்கங்களையும் அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் வெளியிட்டுள்ளார்.
கோ. சுனில்ஜோகி
நீலகிரி படகர்களின் தாவர வழக்காறுகள் - Product Reviews
No reviews available

