மேடை முழக்கமும் திராவிட இயக்கமும்
மேடை முழக்கமும் திராவிட இயக்கமும்
இது ஒரு வித்தியாசமான புத்தகம் என்று நீங்கள் சொல்லுவீர்கள்!
காரணம் சொல்வதற்கு உள்ளே அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் உள்ளே இருக்கும் திராவிட இயக்கத் தலைவர்களில் 90% பேர் இன்று உயிருடன் இல்லை. என்றாலும் அவர்கள் மேடையில் முழங்கிய முழக்கங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பிராமணரல்லாதோர் இயக்கம் என ஆரம்பித்து, பின்னாளில் அதுவே 'நீதிக்கட்சி' என உருமாறி அதிலிருந்து 'திராவிடர் கழகம் என வேர் விட்டு பின் அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் என சிளை விட்ட திராவிட வரலாறுகள் உள்ளடங்கியதுதான் இப்புத்தகம்,
இப்புத்தகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சி, சிந்தனை, சித்தாந்தம், செயல்பாடு,வெற்றி, தோல்வி, இமைகள் மற்றும் 'தலைவர்களின் மேடை முழக்கங்களை' ஓரளவுக்கு குருவி சேகரிப்பது போல் சேகரித்து கூடு கட்டி உள்ளேன். இதில் குறைகள் பிழைகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.
இப்புத்தகம் நிச்சயம் உங்களை கவரும் என்ற பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.
வாங்குங்கள்! வாசியுங்கள்!
வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்!
மேடை முழக்கமும் திராவிட இயக்கமும் - Product Reviews
No reviews available

