மறுபடியும்
மறுபடியும்
கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுதிவரும் மாற்குவின் படைப்புகள் கிறித்தவ தலித் மக்களின் வாழ்வியலையும் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத் திருச்சபையில் நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளையும் அழுத்தமாகப் பேசிவருகின்றன. அவரது ‘வருவான் ஒருநாள்’. ‘கத்தியின்றி ரத்தமின்றி’. ‘சுவர்கள்’, ‘யாத்திரை’, ‘மறியல்’ போன்ற நெடுங்கதைகள் அனைத்துமே தலித் கிறித்தவ வாழ்வியலின் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்தவை. சாதியத்தை உள்வாங்கிக்கொண்டு தீண்டாமைக் கருத்தியலுடன் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழகத் திருச்சபையை மிக வலிமையான கேள்விகளால் மறிக்கும் மாற்குவின் இந்த ‘மறுபடியும் நெடுங்கதைத் தொகுதி மிக முக்கியமான பதிவாகும். இயேசு மீண்டும் பிறந்து தமிழகத்திற்கு வருவாரேயானால் அவர் எவற்றையெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்ற வேறுபட்ட சிந்தனையின் பின்னணியில் உருவாகியுள்ள இம்மூன்று நெடுங்கதைகள், உண்மையில் கிறித்தவத்தின் இன்றைய நிலையையும் கிறித்தவத் துறவிகளின் சாதி, ஆதிக்க உளவியலையும் துல்லியமாகப் பதிவு செய்கின்றன. தமிழகத்தில் கிறித்தவத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
மறுபடியும் - Product Reviews
No reviews available

