மராத்வாடா தலித் சமையலறை
Author: சாஹு பாட்டோலே;தமிழில் : ச. முத்துக்குமாரி
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
மராத்வாடா தலித் சமையலறை
மராத்தியில் வெளிவந்த ஒரு புரட்சிகரமான அபுனைவு, இப்போது முதல்முறையாகத் தமிழில் வெளிவருகிறது.
‘இது என் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் உண்ட உணவு... இது மிகவும் பழகிப்போன ஒரு சுவை. குறிப்பாக. பல நூற்றாண்டு கால பாகுபாட்டின் மூலம் பழகிப்போன சுவை.’
சாஹு பாட்டோலேவின் ‘அன்ன ஹே அபூர்ண பிரம்மா’ என்ற நூல். மகாராஷ்டிராவின் மஹர், மாங் ஆகிய இரண்டு சமூகங்களின் சமையல் பழக்கவழக்கங்கள் வழி தலித் உணவு வரலாற்றைப் பதிவு செய்த முதல் நூலாகும். சமையல் குறிப்புகளுடன் சுயசரிதை வடிவில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம். உணவுகள் மூலம் சமூகப் பிரிவுகளைப் பேணுவதில் உள்ள அரசியலையும், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த விமர்சனத்தையும், எந்த உணவு சாத்வீகமானது (தூய்மையானது) அல்லது இராஜசமானது (அரசனுக்கு ஏற்றது). எது தாமசமானது (பாவமானது). அது ஏன் என்பதையும் ஆராய்கிறது.
இப்போது ‘மராத்வாடா தலித் சமையலறை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம். எண்ணெய், நெய். பால் ஆகியவை இல்லாத, ஸவர்ணர்களுக்குத் தெரியாத உணவுகளைக் கொண்ட ஏழைகளின் எளிமையான உணவுத் தட்டை முன்வைக்கிறது. ஒவ்வொரு வர்ணத்தாரும் என்ன சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்த இந்து வேதங்களையும் இது ஆராய்கிறது. மேலும், உண்ணும் உணவைப் போலவே எண்ணமும் அமையும் என்ற கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
எளிமையான உணவுகள் முதல் பண்டிகை விருந்துகள் வரை கவனமாகப் பின்னப்பட்ட சமையல் குறிப்புகள், சமூகங்களை இணைப்பதிலும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் உணவின் உருமாற்றும் சக்தியை உங்களுக்குக் காட்டுகின்றன.
மராத்வாடா தலித் சமையலறை - Product Reviews
No reviews available

