மலைக்கோட்டை மாயாவி
மலைக்கோட்டை மாயாவி
ஆசிரியர் அறிமுகம்
புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கும் எழுத்தாளர். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.
கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், சிறார் கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வருகிறார். பல்வேறு போட்டிகளில் இவருடைய படைப்புகள் பரிசு வென்றுள்ளன. வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன.
பூஞ்சிட்டு என்கிற சிறுவர் மின்னிதழின் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். வானதி பதிப்பகம் வாயிலாக இதுவரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. கங்கை பதிப்பகம் வாயிலாக வெளிவரும் சிறார் கதை இது.
கதையைப் பற்றி
குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை இது. துருவன் என்கிற சிறுவன், மாயாவி என்கிற கொடியவனை வீழ்த்தி, இளவரசியை மீட்கப் பயணம் மேற்கொள்கிறான். அவனுக்குத் துணையாக, பேசும் கிளி, பேசும் மயில், அற்புத சக்தி கொண்ட அணில் மற்றும் சித்திரக்குள்ளன் ஆகியோர் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்க ளுடைய சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் வினோத அனுபவங்களைத் தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
மலைக்கோட்டை மாயாவி - Product Reviews
No reviews available

