கதை வழிப் பயணம்
கதை வழிப் பயணம்
ரோஜா மொக்கு இளம்சிவப்பு இதழ்களை மென்மையாக விரிப்பது போல ஒரு மணமிக்க பயணமாக அவரது கதைவழிப் பயணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த விமர்சனத் தொகுப்பில் கண்டுள்ள 30 நூல்களில், பல நூல்கள் குறித்த நீண்ட பார்வை நம்மை படிக்க தூண்டுகிறது. குறிப்பாக அசோகமித்திரனின் 18 வது அட்சக்கோடு, டேனியல் இரா முருகவேள் மொழி பெயர்ப்பில் வந்த எரியும் பனிக்காடு கி.ரா எழுதிய கோபல்லபுரம் தேனி சீருடையான் எழுதிய நிறங்களின் உலகம், பெருமாள் முருகனின் பூக்குழி மற்றும் சனஙக ஜமீலா எழுதிய எனது ஆண்கள் போன்ற விமர்சனங்கள் மிகவும் சிறப்பு. உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்தவை. இன்னும் இந்த கதை வழி பயணத்தை நாம் நிகழ்த்திக் கொண்டே போகலாம். இதற்கு மேலும் இந்த நூல். எனக்கு கொடுத்த ஒரு கருத்தும் இருக்கிறது.
பல நூல்கள் எனது சேமிப்பில் இருக்றிது. அதில் பலவற்றை நான் படித்திருக்றிறேன். ஆயினும் அவற்றை தேடி எடுத்து மீண்டும் பலமுறை படிக்கவும், படிக்காத சில நூல்களை உடனே படிக்க வேண்டும் எனறும் எண்ண வைத்திருக்கிறது. மேலும், நளினி ஜமீலாவின் எனது ஆண்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்றும் சொல்ல வைக்கிறார்.
கதை வழிப் பயணம் - Product Reviews
No reviews available

