கண்ணன் வந்தான்

0 reviews  

Author: ,

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கண்ணன் வந்தான்

கண்ணன்! காலங்கடந்து நிற்கும் கதாநாயகன்! இதிகாசங்களில் சொல்லும் தத்துவப்பொருளாக மட்டும் அல்ல; நடைமுறையில் நாம் பார்க்கும் பலரிடமும் கண்ணனின் பாதிப்புகள் தென்படுகின்றன. குறும்பு, சாதுர்யம், புத்திசாலித்தனம், கருணை, நட்பு, காதல்... என்று எல்லாப் பரிமாணத்துக்கும் அமைந்த எல்லை, கண்ணன். ரசிக்கவைக்கும் லீலைகள், வியக்கவைக்கும் அற்புதங்கள், மயங்கவைக்கும் காதல், பிரமிக்கவைக்கும் சாதுர்யம்... எல்லாம் கண்ணனிடம் அடக்கம்! வேதாந்திகளையே மயங்கவைத்த கண்ணன், லௌகீகத்தில் உழலும் மக்களைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. பரிபாடல், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் என்று இலக்கியங்கள் போற்றும் கண்ணனை, சகஜநடையில் நம்முடன் கைகோக்க வைக்கிறார் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன். பேச்சிலும் சிந்தனையிலும் ஆன்மிக ரசம் தளும்பிவழியும் இவரது எழுத்துகள், உங்களைப் பரவசப்பட வைக்கப்போகிறது என்பது சத்தியம்.

கண்ணன் வந்தான் - Product Reviews


No reviews available