காக்கைச் சிறகினிலே (கிழக்கு)

0 reviews  

Author: வ.கோகுலா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காக்கைச் சிறகினிலே (கிழக்கு)

பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி! ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன? பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம். ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.

காக்கைச் சிறகினிலே (கிழக்கு) - Product Reviews


No reviews available