கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?
இந்திய ஒன்றியத்தின் தென்கிழக்குப் பகுதியில் இராமேசுவரத்தை அடுத்து அமைந்த சிறிய தீவுதான் கச்சத்தீவு. அது காலங்காலமாக தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குட்பட்ட, பயன்பாட்டுக்கு உட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. கடலோர மீனவர்களின் பயன்பாட்டில் இருந்த தமிழ்நாட்டுப் பகுதி. அந்தச் சிறியத் தீவுப் பகுதி 28.06.1974இல் இந்திய அரசினால் இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் உணர்வை மதிக்காமல் தமிழ்மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இலங்கைக்கு அத்தீவைத் தாரை வார்த்தது இந்திய அரசு. தமிழக மக்களின் உணர்வுக்கு முரணாக செயல்பட்ட நிலையில் இன்றுவரை தமிழக மீனவர்கள் அன்றாடம் பெறுகின்ற இன்னல்களையும், இழப்புகளையும் கண்கூடாகக் கண்ட பிறகும் இந்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் செயல்படும் வரலாற்றின் தொகுப்பாகக் "கச்சத்தீவு
யாருக்குச் சொந்தம்" என்னும் இந்த நூல் அமைந்துள்ளது. கச்சத்தீவு மீட்கப்படும் நாளே தமிழ்மக்களின், தமிழ்நாட்டு மீனவர்களின் விடியலாக இருக்கும் என்பதை இந்த நூல் விளக்கும் ஆவணமாக உள்ளது.
திரு.திவான் என்பவர் ஆவணங்களை முறையாகத் தொகுத்து நூலை முழுமைப்படுத்தப்பட்ட ஆவணத் தொகுப்பாக இந்த ஆக்கியுள்ளார். 80 நூல்களை எழுதியுள்ள ஆசிரியரின் இந்த நூல் கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வழிகாட்டுகிறது.
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்? - Product Reviews
No reviews available

