ஜிக்சா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள்
ஜிக்சா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள்
எனக்கு அறிவு தெரிந்த காலத்தில், சீக்கிரம் பெரியவளாகிவிட வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு; தன்னிச்சையாக வாழும் சுதந்திரம் பெரியவர்களுக்குத்தான் என்று அப்போது நான் நம்பியிருந்தேன். ஒரு குழந்தைக்கு இருக்கும் சுதந்திரம் பெரியவர்களுக்கு இருக்காது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அழுவதற்கோ சிரிப்பதற்கோ யாதொரு காரணமும் தேவையில்லை; கால நேரம் இடம் பொருள் குறித்த கவலையில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நஞ்சு கலக்காத பருவம். அந்த நஞ்சு எத்தகைய மனத்திலும் கசப்பைக் கொண்டு சேர்த்துவிடும்.
கவிதையென ஒன்றை எழுதி முடிக்கும்போது, ஒரு ஆரஞ்சு மிட்டாய்போல் அதை உள்ளே ஒதுக்கி வைத்துக்கொள்கிறேன்.
அது மெல்ல மெல்லக் கரையும்போது, எத்தகைய கசப்பின் ஓரத்திலும் இனிப்பின் ஞாபகமொன்றைத் தீட்டிவிடுகிறது.
நஞ்சின் முறிமருந்தொன்று எப்போதும் நம் கையெட்டும் தொலைவிலேயே இருக்கிறது.
-கார்த்திகா முகுந்த்
ஜிக்சா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள் - Product Reviews
No reviews available

