ஜாதியற்றவளின் குரல்

0 reviews  

Author: ஜெயராணி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஜாதியற்றவளின் குரல்

ஜாதி ஒழிப்பு சார்ந்த கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகளாகின்றன. இந்நூலில் உள்ள கட்டுரைகள் 2001-2010 வரை எழுதப்பட்டவை. ஆனால், அதன்பின்னர் நான் எழுதிய எல்லாமே திரும்பச் செயல்தான்; நபர்களும் ஊர்களும் மட்டுமே மாறியிருக்கும். ஆனால் ,சாதி நிலையானதாக அப்படியே இருப்பதை சாதி ஒழிப்பிற்காகப் போராடிய போராடும் பலரையும் போல நானும் வெறுப்போடு பார்க்கிறேன். எந்த அரசியல், சமூகப் போராட்டங்களாலும் சாதியை அசைத்துப் பார்க்க முடியவில்லை. பேரிடர் தூக்கினால் பேரிடரிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது. இதோ தற்போது கொரோனாவிற்காக ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது.

மீண்டும் மீண்டும் வன்கொடுமைகள், தீண்டாமைகள், புறக்கணிப்புகள், அந்தத் துறையில் ஒடுக்குமறை,  இந்தத் துறையில் பாகுபாடு என எழுதிக் கொண்டே இருப்பதற்கு முடிவே வரவில்லை. ஓர் அநீதியை எதிர்த்துப் போராடுவது எதற்காக? அந்த அநீதி ஒரு சில தலைமுறைகவிலாவது ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், சாதிக்கு மட்டும் அத்தகைய நிலையை நாம் ஏன் உருவாக்கவில்லை? பிரச்சனைகளை பேசிக் கொண்டே இருப்பது தீர்விற்கு வழி வகுக்காது; தீர்வைப் பற்றி பேசுவது மட்டுமே பிரச்சனையை ஒழிக்கும் என்பது அண்மையில்தான் எனக்கு விளங்கத் தொடங்கியிருக்கிறது. எனது அனுபவத்தில் விளைந்த மனப்பக்குவமாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

ஜாதியற்றவளின் குரல் - Product Reviews


No reviews available