ஐயோடா.. பிரபஞ்சத்தில் வகை வகையாய் மழை

0 reviews  

Author: பேரா. சோ. மோகனா

Category: சூழலியல்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஐயோடா.. பிரபஞ்சத்தில் வகை வகையாய் மழை

பேரா.சோ.மோகனா 38 ஆண்டுகள் விலங்கியல் துறைப் பேராசிரியர், துறைத் தலைவர். பொறுப்பு முதல்வர் எனப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருபவர். நான்கு ஆண்டுகள் மாநிலத் தலைவர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர். களப்பணியைப் போலவே எழுத்திலும் பங்களிப்பைச் செய்பவர். இந்தியத் தொழிற்சங்க மையத்தின் மாநிலக்குழு உறுப்பினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட துணைத்தலைவர். வானவியலாளர். சமதா அமைப்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர். 20 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளர்களுடன் பணியாற்றுகிறார். 130 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
மழை என்றதும் நம் நினைவுக்கு வருவது கருமேகங்கள். வானிலிருந்து விழும் நீர்த்துளிகள். அவை உருவாக்கும் குளிர்ச்சியான சூழல் ஆகியவை தான். ஆனால், பூமியைத் தாண்டி விண்வெளியில் உள்ள பிற கோள்களிலும் துணைக் கோள்களிலும் எத்தகைய மழை பெய்கிறது என்று சிந்தித்திருக்கிறோமா? அங்கு பெய்வது நாம் காணும் நீர் மழையாக மட்டும்தானா?அமில மழை. ஹீலியம் மழை, வைர மழை. இரும்பு மழை எனப் பல்வேறு வகையான மழைகள் இருக்கக்கூடும் என்ற செய்தி வியப்பூட்டுகிறது. இத்தகைய அரிய அறிவியல் செய்திகளைச் சுவைபட அறிமுகப்படுத்தும் நூலாகப் பேராசிரியர் சோ.மோகனா அவர்களின் "பிரபஞ்சத்தில் வகை வகையாய் மழை" நூல் அமைந்துள்ளது.
- முனைவர் பெ. சசிக்குமார்
அறிவியல் எழுத்தாளர், இஸ்ரோ விஞ்ஞானி

ஐயோடா.. பிரபஞ்சத்தில் வகை வகையாய் மழை - Product Reviews


No reviews available