இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100
இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100
தற்காலத்தில் வாழும் விஞ்ஞானிகள் குறித்து யாரும் பேசுவதில்லை. பல்கலைக்கழகங்கள் முதல் கல்லூரிகள் வரை அறிவியல் துறைகள் மூடப்படுகின்றன. நம் கல்லூரிகளில் கல்வி கற்று உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளாக இருக்கும் 100 பேரை இந்தப் புத்தகத்தில் முன்னுதாரணமாக காட்டியிருக்கிறேன். இந்த 100 விஞ்ஞானிகளை நான் தேர்வு செய்தது எப்படி என்று பலரும் கேட்கிறார்கள். இரண்டு மிக முக்கியமான தகுதிகளை வைத்து நான் என் தேர்வில் இறங்கினேன். ஒன்று, இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவராக அவர் இருக்க வேண்டும். இது முதல் விதி. பொறியியலாளராகவோ அல்லது தொழில்நுட்ப விஞ்ஞானியாகவோ இருந்தால். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு கண்டுபிடிப்பு உரிமங்கள் வைத்திருக்க வேண்டும். இதுதான் இரண்டாவது விதி. இந்த 100 பேரில் 30க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். நான்கில் ஒருவர் பெண். விஞ்ஞானி என்றாலே ராக்கெட் விடுபவர்தான் எனும் நிலையை மீறி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 100 பேரின் வெற்றிக் கதைகளை இந்நூல் பேசுகிறது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பரிசாக வழங்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.
இன்றைய இந்திய விஞ்ஞானிகள்-100 - Product Reviews
No reviews available

