Gen Z ஒரு தலைமுறையின் கதை
Gen Z ஒரு தலைமுறையின் கதை
நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு. இவற்றோடு காற்றில் இணையமும் கலந்த நேரத்தில் பிறந்தவர்கள் ஜென் ஸீ பிள்ளைகள். (1997 முதல் 2012 வரை).
எப்படி முடிவெட்டலாம் என்பது முதல், எந்தப் படிப்பில் சேரலாம் என முடிவெடுப்பதுவரை இணைய சக்தியை மட்டுமே நம்பியிருக்கும் டிஜிட்டல் பூர்வகுடிகள். ஆப்பிளைப் பழமாகவும், விண்டோஸை ஜன்னலாகவுமே பார்த்துப்பழகிய தலைமுறையினருக்கு இந்தப் பிள்ளைகளைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். ஆனால் முழ நீளத்தில் புரியாமலிருக்கும் டேர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸைப் போல அத்தனை சிக்கலானவர்கள் ஒன்றும் இல்லை.
சிக்மா, ஸ்லே, டெலுலு என்பது போல இவர்கள் அகராதியில் புழங்கும் சில வார்த்தைகள், கவலைகளைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் ‘ஸோ வாட்?’ என வாழும் இயல்பு, உணர்ச்சிகளை விட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை, இவற்றை எந்த முன்முடிவும் இல்லாமல் கவனித்தால் போதும்.
அப்படியான ஜென் ஸீ விஷயங்களைத்தான் இந்த நூல் பேசியிருக்கிறது. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு கதையுடன் தொடங்கி, தூண்டில் கேள்வியுடன் முடியும். ஜென் ஸீ தலைமுறையைப் புரிந்துகொண்டவராக இருப்பின் ஏஐ துணையில்லாமல் அவற்றுக்கு விடை சொல்லிவிடலாம். முயன்று பாருங்கள்.
Gen Z ஒரு தலைமுறையின் கதை - Product Reviews
No reviews available

