எப்போதும் இப்படித்தான்
எப்போதும் இப்படித்தான்
நீங்கள் ஒரு டைம் மெஷினில் ஏறி இப்போதிருந்து ஐந்நூறு வருடங்களுக்குப் பின் சென்றாலும் சரி ஐந்நூறு வருடங்களுக்கு முன் சென்றாலும் சரி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ஆடிப்போவீர்கள். புவிசார் அரசியல் எல்லாம் உங்களுக்கு கத்தமாகப் புரியாது மொழியும் அதன் வடிவமும் உங்களுக்கு அந்நியமாகத் தோன்றும் ஆனால் இப்போது நடப்பதைப் போலவே மக்கள் பேராசை மற்றும் பயத்தால் ஆட்டிப்படைக்கப்படுவதையும், அதீத நம்பிக்கை மக்கள் கண்களை மறைப்பது மற்றும் ஆபத்து, பொறாமை மற்றும் இன ஈர்ப்பின் பேரில் மக்கள் செலுத்தப்படுவதையும் காணலாம். பழக்கமில்லாத அந்த உலகிற்கு செல்லும் போது சிறிது நேரம் அங்குள்ள மக்களை கவனித்துவிட்டு, "அட இதைத்தான் நான்பார்த்திருக்கிறேனே எப்போதும் இப்படித்தான்."என்பீர்கள்.எப்போதும் இப்படித்தான் என்ற இந்தப் பத்தகத்தில், முதல் அணு ஆயுதங்களின் கண்டுபிடிப்பு முதல் அமேசான் நிறுவப்பட்டது வரை, டி.இ. லாரன்ஸ் முதல் ஜாக் வெல்ச் வரை என உலகின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுவதில் ஆதிக்கம் செலுத்திய நடத்தைகளைப் பற்றி மார்கள் ஹௌஸ்ஸேல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆபத்து, வாய்ப்பு மற்றும் நல்ல வாழ்க்கை வாழ்வது பற்றிய இந்தக் கதைகள் முக்கியமான, காலத்தை தாண்டி நிற்கும் பாடங்களை நமக்குக் கற்றுத் தருவதால், தேவையானதிலிருந்து தேவையற்றதை பிரித்து அறிந்து, நம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தலாம்.வரலாறு முழுவதும் யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த ஆச்சரியமான முடிவுகளால் நிரம்பியுள்ளது. ஆனால் எது மாறும் எது மாறாது என்பதை நாம் கற்றுக்கொண்டால், வரும் எதிர்காலம் என்னவாக இருந்தாலும், நாம் எடுக்கப்போகும் முடிவுகளை அதிக நம்பிக்கையுடன் எடுக்க முடியும்.
எப்போதும் இப்படித்தான் - Product Reviews
No reviews available

