தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

0 reviews  

Author: க.பஞ்சாங்கம்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  425.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான ஒரு பகுதிக்கான தலத்தை மட்டும் மையமிட்டு வடிவமைக்கப்பட்ட சதியாக இருக்கிறது. இதனால் பெரும் பயனடையும் இந்தக் குழு, நீட்ஷே சொன்னதுபோல 'குறிக்கோளை அடைக; அடைந்ததை நிரந்தரமாக்குக என்ற அணுகுமுறையைக் கையாண்டு நிரந்தரமாக்கிக்கொண்டது. இதற்காகப் பல்வேறு உத்திகளைப் பருமனாகவும் அரூபமாகவும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எதிர்ச்சொல்லாடல் எதுவும் உருவாகி நிலைத்துவிடாத படி கண்காணித்துக் கொள்ளுகிறது. கல்வியைப் பறித்துவிடுவது, பொருளாதாரப் பலத்தைப் பிடுங்கிவிடுவது, மனிதர்களின் சக்திக்கிடங்கான மொழியைச் சிதைத்துவிடுவது, ஊடகங்களே இல்லாமல் ஆக்குவது ஆகிய முறைகளில் இயங்குவதும் ஆதிக்கச் சாதிகளின் செயல்பாடாக இருக்கிறது. புத்தர் தொடங்கிப் பெரியார், அம்பேத்கார் என்று எத்தனையோ பேர் இந்தச் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடிப் பார்த்தாலும் கூட இந்திய மனித மனத்திலிருந்து இச்சாதி மனோபாவத்தைக் கிள்ளி எடுத்து வீசி எறிய முடியாத அவலநிலைதான் தொடர்கிறது."

தலித்துகள் பெண்கள் தமிழர்கள் - Product Reviews


No reviews available