செழியன் வானவன் செங்கோற்சேந்தன்
செழியன் வானவன் செங்கோற்சேந்தன்
நூலாசிரியரைப் பற்றி...
இந்தப் புதினத்தின் ஆசிரியரான திருமதி. புவனா சந்திரசேகரன். மதுரையைச் சேர்ந்தவர். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
சிறுகதைகள், குறுநாவல்கள். கவிதைகள் மற்றும் புதினங்கள் எழுதி வரும் இவர் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள் மற்றும் சிறார் கதைகள் எழுதி வருகிறார். வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. பல்வேறு புதினங்கள் அச்சில் வெளிவந்துள்ளன. கங்கை புத்தக நிலையத்தின் தொடர் ஆதரவுடன் அச்சில் வரும் பன்னிரெண்டாவது நூல் இது.
கதையைப் பற்றி...
களப்பிரர் பிடியில் இருந்து ஆட்சியை மீட்டு மதுரையில் அரியணையில் அமர்ந்த LD601601601 கடுங்கோனுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த அவனி சூளாமணியின் மைந்தனான செழியன் சேந்தன் கதை இது. சேரரை வென்று வானவன் என்ற பெயரைப் பெற்றவன்.
அரியணையில் அமர்ந்ததில் இருந்து திறமையாக ஆட்சி செய்து மக்களின் அன்பைச் சம்பாதித்தவன். செழியனின் வாழ்நாளில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைக் கோர்த்து இந்த நூலைப் படைத்திருக்கிறேன். பாண்டிய வம்சத்தின் ஆட்சி, பல்வேறு நூற்றாண்டுகள் தொடர்ந்தது. பாண்டியரின் புகழும், அவர்களுடைய மீன் கொடியைப் போலவே எட்டுத் திக்கும் பறந்து ஒளி வீசியது.
செழியன் வானவன் செங்கோற்சேந்தன் - Product Reviews
No reviews available

