அரங்கனோடு பொழுதுகள்`
அரங்கனோடு பொழுதுகள்`
அரங்கனுடன் எல்லாப் பொழுதுகளும் மானசீகமாய் இருந்து வரும் ரம்யா வாசிப்பவர்கள் கண் பட்டுவிடக்கூடாது என எண்ணியோ என்னவோ அரங்களோடு சில பொழுதுகள் என அடக்கமாக தலைப்பு வைத்திருக்கிறார்.
"எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தை பட்டாலும் பழுத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்பார்கள் இவருடைய மனம் சதா சர்வ காலம் ஸ்ரீரங்கக் கோவிலுக்குள்ளே லயித்திருக்கிறது என்பதற்கு இந்த நூல் ஓர் உதாரணம். அரையர் சேவை எப்படி இருக்கும் என்று வாசிப்பதன் மூலமே கண்கொண்டு பார்க்க முடியுமா என உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த நூலை முழுக்க வாசியுங்கள் பகல் பத்து உற்சவத்தைப் பார்த்த நிறைவே கிடைக்கிறது.
அரங்க தரிசனத்திற்கு நம்மாழ்வாரை வருவிக்கும் காட்சியாகட்டும் தாயார் சன்னதிக்கு போகும் வழியில் இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பகுதியை விவரிப்பதாக இருக்கட்டும் பள்ளி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக வந்தவரை அழைத்துச் சென்று சன்னதி சன்னதியாய் விவரித்தது போல் மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கு ஸ்ரீரங்கத்தை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார்
காய்ந்திருந்த திருத்துழாய் மாலை கையில் கிடைத்ததும் அது அரங்கள் அணிந்திருந்தது என்று தெரிந்ததும் அதை அள்ளி முகர்ந்து அணைத்து முகத்தில் வைத்து அழுத்திக் கொண்டு ரம்யா பட்ட அனுபவத்தைப் பெற்ற ஆனந்தத்தை இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களும் பெற முடியும்.
ஒரே வரியில் சொல்வதென்றால் இந்த நூல் திருவரங்கத் தேன் மழை ஸ்ரீரங்கப் பிரசாதம்.
மரபின் மைந்தன் முத்தையா
அரங்கனோடு பொழுதுகள்` - Product Reviews
No reviews available

