அனொனிமா: முகம் மறைத்தவள்(பேர்லின் போர்: ஒரு பெண்ணின் நாட்குறிப்புப் பதிவுகள்)

0 reviews  

Author: தேவா

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அனொனிமா: முகம் மறைத்தவள்(பேர்லின் போர்: ஒரு பெண்ணின் நாட்குறிப்புப் பதிவுகள்)

மூன்றாம் ரைஹ் சரணாகதியின் நுழைவாயிலில் பெர்லீன் குண்டுத் தாக்குதலில் சின்னாபின்னாமாகி, மக்களிடம் பசியைத்தவிர ஒன்றுமேயில்லை. முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் நிலவறை குடிமக்களாய், இவர்களிடையே முப்பது வயதான ஒரு இளம் பெண்ணும் சம குடிமகளாய், மூன்று அப்பியாசக் கொப்பிகள்தான் இவரின் சொத்து, அதில் அவர் அந்தந்த நாளின் பகல், இரவுகளில் நடந்தவற்றை எழுதிவந்தார்.

தன் பெயர் வெளியிடக்கூடாதென்பது ஆசிரியையின் விருப்பம். இதனால் மரணத்தின் பின்னர்தான் தன் நாட்குறிப்பு பொதுவெளிக்கு வர அனுமதித்தார் இருந்தும் ஐம்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும் பின்னர் ஜெர்மனியிலும் இவர் குறிப்புக்கள் வெளிவந்தபோது நம்ப முடியாதளவு எதிர்ப்பு எழுந்தது. மீள்பதிப்பாக ஜெர்மனியில் 'மாற்று நூலகம் வெளியிட்டபோது இவரின் அடையாளம் பற்றி பல ஊகங்கள் வெளிவந்தன. நாட்குறிப்பின் உண்மைத் தன்மையை வால்ட்டர் கெம்போவ்ஸ்கி உறுதிசெய்தார். இறந்த பின்னும் அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்து பெயர் வெளியிடப்படாததே தொடர்கிறது.

அனொனிமா: முகம் மறைத்தவள்(பேர்லின் போர்: ஒரு பெண்ணின் நாட்குறிப்புப் பதிவுகள்) - Product Reviews


No reviews available