100 தலை மேதாவி
100 தலை மேதாவி
உலகளாவிய மனித குல அறிவு மற்றும் திறமைகளின் ஒட்டுமொத்த மின்னணுத் தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - Al). 21-ஆம் நூற்றாண்டு மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சங்களில் ஒன்று என இதைச் சொல்லலாம்.
மனிதர்களைப் போலவே சிந்திக்கிற, பகுத்தறிகிற, கற்றுக்கொள்கிற மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிற திறனை மென்பொருள்களுக்கு வழங்குகிற இந்தத் தொழில்நுட்பம், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளின் கற்பனை உலகத்தில் மட்டுமே சாத்தியம் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்று. செயற்கை நுண்ணறிவு நம்முடைய அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆழமாக ஊடுருவி, நாம் வேலை செய்யும் விதம், தகவல் தொடர்புகொள்ளும் முறை மற்றும் உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் ஆகியவற்றில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தனி மனிதர்கள், சமூகம், பல துறைத் தொழில்கள், தனியார் நிறுவனங்கள். அரசு அமைப்புகள், கலை, இலக்கியம் என சகல இடங்களிலும், துறைகளிலும், வெவ்வேறு வகையான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் உள்ளன. இன்றும் இனியும் தவிர்க்க முடியாத அங்கமாக ஆகிவிட்ட செயற்கை நுண்ணறிவுதான், எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போகிறது. இது குறித்த ஆழமும் விரிவும் கொண்ட ஆய்வுக் கட்டுரை நூல் இது.
100 தலை மேதாவி - Product Reviews
No reviews available

