உங்களால் முடியும் (psv குமாரசாமி)

0 reviews  

Author: psv குமாரசாமி

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உங்களால் முடியும் (psv குமாரசாமி)

தாங்கள் எல்லோராலும் அங்கேரிக்கப்படுகின்றவர்களாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் கொண்டாடப்படுகின்றவர்களாகவும் இருக்கிறோம் என்ற உணர்வு மிகவும் சக்திவாய்ந்த ஒன்று அடுத்தவரை நீங்கள் எவ்வளவு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக உணரச் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர் உங்களை மதிப்பார்.

முன்பின் பரிச்சயம் இல்லாத சமூகச் குழல்களில் கலந்து கொண்டாலும், அங்குள்ளவர்களிடம் மிகவும் இயல்பாக உரையாடல்களை நிகழ்த்தக்கூடியவர்களைக் கண்டு நாம் எப்போதும் பிரமிக்கிறோம். இவர்களிடம் ஒருவிதமான 'வசீகரம்' இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். அவர்களால் மட்டும் எப்படி அதைச் சாதிக்க முடிகிறது என்று ஒரு சிலர் வியந்தாலும், அது அவர்களுக்கு 'இயல்பாக' வருகிறது என்று பெரும்பாலானோர் அனுமானித்துக் கொள்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. செல்வாக்குடன் திகழ்கின்றவர்களில் பலர் 'வசிகரம்' என்ற திறனை முறையாகத் தங்களிடம் வளர்த்துக்

கொண்டுள்ளவர்கள்தாம், அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உறுதியும் சரியான தகவல்களும் உங்களிடம் இருந்தால், கண்டிப்பாக அத்திறனை உங்களால் வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் கச்சிதப்படுத்திக் கொள்ளவும் முடியும்,

எந்தச் சூழலிலும் பிறர்மீது தாக்கம் விளைவிக்கின்ற ஒருவராக நீங்கள் -ருவாவதற்குத் தேவையான திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நீங்கள் செயல்படுத்தும்போது, “இவ்வளவு பிரமாதமாக மக்களிடம் உரையாடும் திறனை எப்படி நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள்?” என்று மற்றவர்கள் உங்களிடம் கேட்கத் தொடங்கினால் ஆச்சரியம் அடையாதீர்கள். அப்படி அவர்கள் கேட்கவில்லை என்றாலும், நீங்கள் பிறரைப் பற்றி ஒரு காலத்தில் எப்படி வியந்து கொண்டிருந்தீர்களோ அவ்வாறே அவர்கள் தங்களுக்குள் உங்களைப் பற்றி இப்போது வியந்து கொண்டிருப்பர்.

பிறருடனான உங்கள் உறவில் நீங்கள் அசாதாரணமான வெற்றியை அடையத் தேவையான திறன்களை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

“இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள எளிய உத்திகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பிறருடனான கருத்துப் பரிமாற்றங்களில் உங்களால் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,

உங்களால் முடியும் (psv குமாரசாமி) - Product Reviews


No reviews available