தொல்லியல் நோக்கில் – 2
Author: கி. ஸ்ரீதரன்
Category: கல்வெட்டுக்கள் தொல்லியல் துறை
Available - Shipped in 5-6 business days
தொல்லியல் நோக்கில் – 2
தொல்லியல் நோக்கில் என்ற இந்நூல் தொகுதி-2 வெளியிடப்பட்டுள்ளது. "தொல்லியல் நோக்கில் முதல் தொகுதி" 2018ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பட்டரைப் பெரும்புதூர், மாங்குடி, காஞ்சிபுரம், கருவூர், உறையூர், தேரிருவேலி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் சிறப்புகள் கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளன.
மேலும், மனித சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்று விளங்கும் கூரை ஓடுகள், சுடுமண் முத்திரைகள், பகடைக்காய் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் தொன்று தொட்டு விளங்கும் செங்கற் கட்டிடக்கலை, வரலாற்றில் இடம்பெற்று விளங்கும் சுடுமண் கலை. சுருங்கை, (நீர் செல்லும் உழி) வயையலின் தொன்மை போன்ற
கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
வரலாற்றுப் பெருமைமிக்க தொல்லியல் சான்றுகள் மற்றும் திருக்கோயில்கள் போன்றவைகள் நிறைந்து விளங்கும் திருச்சிராப்பள்ளி, அரியலூர் மாவட்டங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தொல்லியல் நோக்கில் – 2 - Product Reviews
No reviews available

