தடயம்
தடயம்
எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி. குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின் குணம், எல்லாமே அறியத் தருகின்றன தடயங்கள். அதைக் கற்றுத் தருகிறது, தடயவியல்.
இந்நூல் திகில் நிறைந்த அந்த உலகுக்கு உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது.
இதன் ஒவ்வோர் அத்தியாயமும் உண்மையான குற்றச் சம்பவம் ஒன்றின் பின்னணியை ஆராய்ந்து, குற்றவாளி பிடிபடக் காரணமான தடயங்களை விரிவாக அலசுகிறது. தடயவியலின் பல்வேறு பிரிவுகள் அதன் வழியாக அறிமுகமாகின்றன. நூலாசிரியர் ரிஷி ரமணா, தடயவியல் துறையில் பல ஆண்டுகள் பெற்ற கள அனுபவங்கள் எழுத்தில் பிரதிபலிக்கின்றன.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியாகி வெற்றி கண்ட தொடர், இப்போது நூலாகிறது.
தடயம் - Product Reviews
No reviews available

