சிலப்பதிகாரமும் கில்காமேசும்
சிலப்பதிகாரமும் கில்காமேசும்
சிலப்பதிகாரம் பண்டைத் தமிழகத்தின் வரலாற்றுப் பெட்டகம், இந்நூலை ஒவ்வொரு முறைப் பயிலும்போதும், ஒவ்வொரு பட்டறிவுப் பொருளைத் தருகிறது. ஆகவே, சிலப்பதிகாரத்தைப் பலமுறையும், பல்லாற்றானும் கற்றுப் பயனுற வேண்டிய நூலாகும். அதன்பொருட்டு இந்நூலை முன்னிறுத்திப் பல ஆய்வு நூல்கள் வந்துவிட்டபோதிலும், தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்று கற்றனைத்தூறும் கருத்துகளைக் கொண்டிருக்கிறது. ஆகவே, 'சிலப்பதிகாரமும் கில்காமேசும்' எனும் பொருண்மையில் அமைந்த எனது நூல் சிலப்பதிகாரமும் கில்காமேசும், சிலப்பதிகாரத்தில் இனவியச் சடங்குகள், சிலப்பதிகாரத்தில் பல்லுயிரிகள், சிலப்பதிகாரம்: குற்றமும் தண்டனையும், பின்னோக்கு உத்தி: மங்கல வாழ்த்தில் கண்ணகியின் வாழ்வியல், சிலப்பதிகாரத்தில் மீவியற்கைப் படைப்பாக்கம், இந்திரா பார்த்தசாரதியின் கொங்கைத் தீயில் பெண்மொழி: புனைவும் நீக்கமும் என ஒப்பிலக்கியம், இனவரைவியல், உயிரியல், சமுதாயவியல், பெண்ணியம் குறித்த ஏழு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.
சிலப்பதிகாரமும் கில்காமேசும் - Product Reviews
No reviews available

