பட்டறை
பட்டறை
"சிறுதொழிற்கூடம் கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் 'பட்டறை.' சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்கள். ஆனால் அங்கே விரியும் கதைகள் ஏராளம். பசி, காதல், காமம், நட்பு, துரோகம், அன்பு, வன்மம், சுரண்டல் என எல்லாம் கலந்த சமூகச் சிற்றலகு பட்டறை.தாம் புழங்கும் இடம் நாற்சுவர் எனினும் அதற்குள் எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பிவிடும் இயல்பு இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் கிடைத்ததோ? ஒவ்வொரு மாந்தருக்கும் தனி அடையாளம் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார் பரத்ராஜ் ரவிதாஸ். மாந்தர்கள் இயைந்தும் முரண்பட்டும் வாழ்வதை அப்பட்டமாக விவரித்திருக்கிறார். பாவனை வாழ்வில் இருக்கிறது; பரத்ராஜ் ரவிதாஸின் எழுத்தில் இல்லை. பட்டறைக்குள் மூச்சு முட்ட உழன்று தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவரும் மனநிலையை உருவாக்கியிருக்கும் எழுத்து. பரத்ராஜ் ரவிதாஸ் வாழ்க!"
-எழுத்தாளர் பெருமாள் முருகன்
பட்டறை - Product Reviews
No reviews available

