பணமே ஜெயம்

0 reviews  

Author: பிரசன்னா

Category: வர்த்தகம்

Out of Stock - Not Available

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பணமே ஜெயம்

 பணம் சம்பாதிக்க என்னென்ன வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், வண்டி வண்டியாக ஆலோசனைகள் வந்து குவியும். கணிசமான முதலீடு வேண்டும், வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று தொடங்கி ‘வேண்டும் பட்டியல்’ நீண்டுகொண்டே போகும். இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான். புத்திசாலித்தனம்.
பெரிய அளவில் முதலீடு இருந்தால்தான் லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மாயை. கிட்டத்தட்ட எந்தவித மூலதனமும் இல்லாமல், சாமர்த்தியத்தை மட்டுமே கொண்டு, பெரும் பொருள் ஈட்டியவர்களின் வெற்றிக் கதைகள் பல இதில் உள்ளன. ஒரே ஒரு சிறிய ஹேர் கிளிப்பை வைத்துக்கொண்டு ஒரே வருடத்தில் ஒருவர் பண்ணை வீட்டை வாங்கியிருக்கிறார். சாம்பலை வைத்துக்கொண்டு இன்னொருவர் கை நிறைய சம்பாதித்திருக்கிறார். இன்னொருவர், ‘அழுகைக் கடை’ ஆரம்பித்து, செல்வந்தர் ஆகியிருக்கிறார்.

சமயங்களில், நமக்குள்ளும் இப்படிப்பட்ட தீப்பொறிகள் தோன்றும். ஆனால், அவற்றை நாம் அசட்டை செய்துவிடுகிறோம். நாம் உதாசீனம் செய்வதைத்தான் இவர்கள் முதலீடாகக் கொள்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். இந்தப் புத்தகம் உங்களுக்குள் ஒரு புதிய விதையைத் தூவப்போகிறது. அறுவடைக்கு நீங்கள் தயாரா?

பணமே ஜெயம் - Product Reviews


No reviews available