நீங்கதான் முதலாளியம்மா

0 reviews  

Author: ஆர்.வைதேகி

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீங்கதான் முதலாளியம்மா

படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. படித்தும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும், போதிய கல்வியறிவு இல்லாமல் வீட்டில் இருப்பவர்களும் பலர். கல்வி அறிவு பெறாததினால் அப்படியொரு வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம்... படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் கணவன், குழந்தை என குடும்பநலன் சார்ந்து தன்னை முழுநேர இல்லத்தரசியாக மாற்றிக் கொண்டு, அதிலேயே மனநிறைவடையும் பெண்கள் இன்னொரு பக்கம்... இப்படி பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள்ளேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வகைப் பெண்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் 'நீங்கதான் முதலாளியம்மா’ என்ற இந்நூல்.

‘குங்குமம் தோழி’ இதழில் தொடராக வெளியாகி, பெண்களிடம் இமாலய வரவேற்பைப் பெற்ற வெற்றித் தொடரின் புத்தக வடிவமே இது. 'நீங்கதான் முதலாளியம்மா’ தொடராக வெளியானபோது, அதில் சொல்லப்பட்ட சம்பாதிக்கும் வழிமுறையை விளக்கமாக அறிந்து கொள்ளவும், அத்தொழில்களில் பயிற்சி பெறுவதற்கான ஆலோசனைகளைக் கேட்டும் நேரிலும், கடிதங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் எங்களைத் தொடர்புகொண்ட பெண்களின் எண்ணிக்கை நிறைய. அப்படிப்பட்ட பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட சந்தேகமில்லாமல் இப்புத்தகம் மிகச்சிறந்த வழிகாட்டி! பெண்கள் மத்தியில் காணப்பட்ட இந்த மாற்றம் மனதின் ஓரத்தில் மகிழ்ச்சியை மட்டுமல்ல... சரியான வழிகாட்டுதல் இருந்தால், இன்னும் பல பெண்கள் தன் காலில் சுயமாக நிற்கவும், பொருளாதாரத்தில் மேம்படவும் முடியும் என்ற நம்பிக்கையையும் தந்தது. அதற்கு 'நீங்கதான் முதலாளியம்மா’ என்ற இப்புத்தகம் உறுதியாக உதவும்..

நீங்கதான் முதலாளியம்மா - Product Reviews


No reviews available