நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை

0 reviews  

Author: வெக்ஸ் கிங்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  399.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை

உங்களின் மிகச் சிறந்த அவதாரமாக இருங்கள்

உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா?

இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமுட்ட வந்துள்ளார்.

பின்வருவனவற்றைச் செய்ய நீங்கள் உத்வேகம் பெறுவீர்கள்:

  • உங்களுடைய நலனுக்க முன்னுரிமை கொடுத்தல், உங்களை நீங்களே அக்கறையோடு கவனித்துக் கொள்ளுதல்.
  • நிகழ்கணலயிப்பு, தியானம் ஆகியவை உட்பட நேர்மறையான வாழ்க்கைமுறைப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல்.
  • மாபெரும் வாய்ப்புகளை உங்கள் வாழ்க்கைக்குள் வரவழைப்பதற்கு உங்களுடைய நம்பிக்கைகளை மாற்றுதல் 
  • வெற்றிகரமான உத்திகளைப் பயன்படுத்தி உங்களுடைய இலக்குகளை அடைதல்.
  • பயத்திலிருந்து மீண்டு, பிரபஞ்சத்துடன் இசைவாகச் செயல்படுதல்.
  • உங்களுடைய உயர்ந்த நோக்கத்தைக் கண்டறிந்து, மற்றவர்களுக்க ஒரு கலங்கரைவிளக்கமாக உருவாதல்

நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.

 

நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை - Product Reviews


No reviews available