முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

0 reviews  

Author: ஆந்திரேயி மக்கீன்

Category: குறுநாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

ரஷ்யாவில், செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஒரு நாள் இரவு வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் சந்திக்கின்றனர். ஒருவன், ஷுட்டோவ்; பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன். பல ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டுக்கு வந்திருப்பவன். இன்னொருவன் வோல்ஸ்கி; இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் (பழைய பெயர்: லெனின்கிராட்) முற்றுகை இடப்பட்டபோதும், பின்னர் ஸ்டாலின் ‘அரசியல் தூய்மைப்படுத்துதல் (Great Purge) கொள்கை’யை அமல்படுத்தியபோதும், சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு தன் துணிவையும் மனிதநேயத்தை யும் நிலைநாட்டியவன். இந்தச் சந்திப்பின்போது, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. அதேசமயம், நிலையான - உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது.

ஆந்திரேயி மக்கீன்

ஆந்திரேயி மக்கீன் 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சைபீரியாவில் பிறந்தவர். தாய்மொழி ரஷ்ய மொழியாக இருப்பினும், சிறு வயதிலிருந்தே ஃபிரெஞ்சு மொழியில் ஆர்வம் காட்டி வந்தார். 1987ஆம் ஆண்டு ‘ஆசிரியர் பரிமாற்றத் திட்டம்’ ஒன்றின்கீழ் பிரான்சுக்கு வந்து அங்கேயே தங்கி ஃபிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார். அவர் தன் இயற்பெயரிலும், காப்ரியேல் ஓஸ்மோந்த் (Gabriel Osmonde) என்னும் புனைபெயரிலும் நாவல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இவருடைய நாவல்கள் 40 மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. ஜாஃப்ரே ஸ்ட்ரேச்சென் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரான்சின் உயரிய இலக்கிய விருதுகளான கோங்கூர் (Prix Goncourt) விருதையும், மெதிஸிஸ் (Prix Médicis) விருதையும் பெற்றவர்.

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - Product Reviews


No reviews available