மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
Author: எய் தியோடோரோ ஒசாகி தமிழில்: ச. ஆறுமுகம்
Category: சிறுவர் நூல்கள்
Available - Shipped in 5-6 business days
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில்களை வெட்டினால் தனக்குப் பயன்படுமெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டுவதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக்குள்ளிருந்து ஒளிவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்தது. முழுநிலவு தோன்றியதுபோல் காடு முழுதும் பொலிந்தது. இது என்ன அதிசயம். அவர் கூர்ந்து நோக்கினார். ஒரு குறிப்பிட்ட மூங்கிலின் அடியிலிருந்துதான் அத்தனை ஒளியும் ஊற்றெடுப்பதைக் கண்டார். கோடரியைக் கீழே எறிந்தார். அந்த ஒளிமூங்கிலை நோக்கி விரைந்தார். நெருக்கத்தில் போகப்போகத் தெரிந்தது. அந்த மூங்கில் கழியின் அடியிலிருந்த ஒரு துளைக்குள்ளிருந்தே ஒளி பொங்குகிறது! விந்தையிலும் விந்தை! அந்த ஒளியின் நடுவில் நிற்பது நிச்சயமாக ஒரு மனிதப் பிறவிதான். ஆனால் அதன் உயரம்! மூன்றங்குலம்! அதன் அழகோ? கண்ணைப் பறித்தது! கொள்ளை அழகு!
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும் - Product Reviews
No reviews available

