மரண நகரத்தில்

0 reviews  

Author: சித்ரகொண்ட கங்காதர் ; தமிழில் :க. மாரியப்பன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மரண நகரத்தில்


நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் யோசே சரமாகோவினுடைய 'அந்தகம்' (Blindness) நாவலில், காரணம் தெரியாத குருட்டு நோயால் திடீரென்று தாக்கப்படும் ஒரு நகரம் சித்தரிக்கப்படுகிறது. குருட்டு நோய்க்கு என்ன காரணம்? நாவலில் சொல்லப்படுவதில்லை, போலவே அது திடீரென்று நீங்கும்போதும் ஏன் என்கிற கேள்வி எழுவதில்லை. மக்கள் அந்த நோயில் சில காலம் சிக்கிக்கொள்கிறார்கள். மீள்கிறார்கள் அவ்வளவுதான். ஏறக்குறைய அந்தகத்தைப் போலவே ஒரு காரணம் தெரியாத அழிவைச் சந்தித்த நகரமொன்று கங்காதரின் நாவலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அந்தகம் நாவலை வாசித்தபோது உண்டான அதே வியப்பு மரண நகரம் நாவலை வாசிக்கும்போதும் உண்டாகத்தான் செய்கிறது. அந்தகம், ஒரு மர்ம நோயை முன்வைத்து, மனித நேயம் அழிந்துபோன மனிதயினத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறதென்றால், கங்காதரின் நாவல் மனிதயினமே அழிந்துபோன ஓர் உலகத்தைக் கற்பனை செய்கிறது. ஆனால் கங்காதரின் நாவல் கூடுதல் வியப்பைக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

-பா. வெங்கடேசன்

மரண நகரத்தில் - Product Reviews


No reviews available