மம்மது
மம்மது
இப் புதினத்தில் ஒரு இளம் வாலிபனின் வாழ்க்கை குமரி மாவட்ட இசுலாமிய வட்டாரவழக்கில் சொல்லப்பட்டுள்ளது. தன் பிறப்பைப் பற்றி உண்மையறிந்த அந்த இளைஞனின் தவிப்பும் துயரும் மனப்போராட்டமும் அவனை இறுதியில் வெற்றியாளனாக்குகின்றன. தல்லாரி, வேளம், கைதோலை பாச்சோறு, கச்சமுறி, குப்பாயம், கசவுக்கவுணி போன்ற பல சொல்லாடல்கள் புதுமையாக உள்ளன. பாய்முடைதல், கைதோலை கிழித்தல், ஓலை உலரவைத்தல், பச்சைப் பாக்கு ஊற வைத்தல் போன்ற தொழில் விவரணைகள் வியக்க வைக்கின்றன. தக்கலை பீர்முகம்மது அப்பா பள்ளிவாசல், ஆத்தங்கரைப் பள்ளி வாசல் நிகழ்வுகளைச் சொல்லும் விதம் அருமை. குமரி மாவட்டத்து இசுலாமியரின் அக்கால வாழ்க்கை முறை கதை நெடுகிலும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ ஒரு குறை கோபம், ஆற்றாமை வலி, ஏமாற்றம் - அது தீர்ந்த பின் உள்ளுக்குள் ஏற்படும் உவகைதான் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது. அவ்வாறே மம்மதுவின் வாழ்வும் நகர்கிறது. காலமும் செல்கிறது. முதியவர் மம்மது தன் மகன் வரவை எதிர்நோக்கி மனைவியுடன் வாசற்கதவைத் திறந்து வைக்கிறார். 'அப்போது இடம் கிடைத்த மகிழ்வில் உட்புகுந்த வெளிக்காற்று இருவரையும் இதமாக வருடிச் சென்றது' என்ற அழகிய சொற்றொடருடன் இப் புதினம் முடிவுறுகிறது. மனமென்னும் வாசலைத் திறந்து வைத்தால் மகிழ்ச்சி என்னும் வெளிக்காற்று வருடிச் செல்லும் என்பது உண்மைதானே!
மம்மது - Product Reviews
No reviews available

