கூளமாதாரி

0 reviews  

Author: பெருமாள் முருகன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  375.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கூளமாதாரி

பசிபிக் கடலோர நாடுகள் , தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை உருவாக்குமு் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா? ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக் கண்டம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் அடங்கும்) மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப் படும் பரிசு கிரியாமா பரிசுத்தொகை 30000 டாலர். கூள மாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய seasons of the palm 2004 ஆம் ஆண்டு இப்பரிசுப் போட்டியில் பங்கேற்றது. ஏறத்தாழ இருநூறு நாவல்களில் இருந்து ஐந்து நாவல்கள் இறுதிப் போட்க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக seasons of the palm இடம்பெற்றது. அத்தேர்வுக் குழு இந்நாவலைப்ப ற்றிக் குறிப்பிட்டிருந்து சில வாசகங்கள்: பெருமாள் முருகனின் இந்த நாவல் மிகவும் துன்பப்ப்டக் கூடிய சமூகத்தைச் சேர்ந்து குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது. தீண்டத்தகாத பிரிவனராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டுமு் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.
 

வி நால்லகளில் “கூளமாதாரி'யைப் போல

தாள் எவித்து எழுதிய நாவல் பிறிதொன்றில்லை. காரணம் அதன் களம், என் பால்யம் இன்றைக்கும் வாழும் கனம் அது. கூரைகளின் கீழ் வாழும் சாலம் இது ஆனால் எப்பேர்ப்பட்ட கூறையும் எனக்குச் சங்கடமே தரும். உடைத்து வெளியேறிவிடும் தவிப்பை அடைவதுண்டு. ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம், வெயில், மழை, குளிர், பனி காற்று. பொழுது, நிலவு, மலை, புழுதி, பசுமை, வறள் மல்லாம் கூடிக் கலந்த என் மனவெளி அது. அதை உணரும் பேற்றை எனக்கு வழங்கியது இந்நாவலின் களமாகிய மேட்டுக்காட்டு மண். அங்கு உலவும் மனிதர்கள் உயிர் 'பெறுவதே அந்நிலத்தால்தான். ஆகவே அந்நிலத்தையும் பாத்திரமாக்கி உயிர் கொடுக்கும் சவாலை மேற்கொண்டேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன்.

கூளமாதாரி - Product Reviews


No reviews available