பாரதப் பெருமகன் டாக்டர் ப.சுப்புராயன்
பாரதப் பெருமகன் டாக்டர் ப.சுப்புராயன்
டாக்டர் ப. சுப்பராயன் அரசியல் நேர்மை, சமூகநீதி, நிர்வாகத் திறன் ஆகியவற்றின் வரலாற்றுப் பேராளுமை. தமிழகத்தின் முதலமைச்சராகத் தொடங்கி, மாநில மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு உயர்ப் பொறுப்புகளை வகித்து, ஒவ்வொரு பதவியிலும் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவர்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, ஜமீன்தாரி ஒழிப்பு எனச் சமூக மாற்றத் திற்கான பல முன்னோடித் திட்டங்களை முன்னெடுத்தவர். தாம் ஜமீன்தாராக இருந்தபோதும் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டத்தை ஆதரித்த அவரது செயல்பாடு, பொதுநலத்தின் மீதான அவரது பற்றுறுதியை வெளிப்படுத்துகிறது.
அரசியல், கல்வி, சட்டம், விளையாட்டு, நிர்வாகம் எனப் பல துறைகளில் தடம் பதித்த அவரது வாழ்க்கை, கொங்குநாட்டின் வரலாற்றோடும் தமிழகத்தின் சமூக அரசியல் மாற்றங்களோடும் பின்னிப் பிணைந்துள்ளது.
ஆவணங்கள், கள ஆய்வுச் செய்திகள், அரிய புகைப்படங்கள் ஆகியவற்றின் துணையுடன் உருவாகியுள்ள இந்நூல், டாக்டர் ப. சுப்பராயனின் வாழ்க்கையையும் பணிகளையும் விரிவாகப் பதிவு செய்கிறது. ஒரு தலைவரின் வரலாற்றைத் தாண்டி, தமிழகத்தின் நாற்பது ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக வரலாற்றின் முக்கியப் பக்கங்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் அரிய வரலாற்றுப் படைப்பு.
பாரதப் பெருமகன் டாக்டர் ப.சுப்புராயன் - Product Reviews
No reviews available

