FD beerangi-paadalgal-63386.jpg

பீரங்கிப் பாடல்கள்

0 reviews  

Author: என்.எஸ். மாதவன்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பீரங்கிப் பாடல்கள்

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற "Lanthan Batheriyile Luthiniyakal" நாவல் முதல்முறையாக இப்போது தமிழில். 1951ல் தொடங்கி 1967 வரையிலான ஜெசிக்காவின் பதினாறு ஆண்டுகால வாழ்க்கை என்று இந்நாவலைச் சுருக்கமாக அழைக்கலாமா? அல்லது கம்யூனிஸ்டுகளும் பாதிரிமார்களும் தச்சர்களும் சமையல்காரர்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் தையல்காரர்களும் நிறைந்திருப்பதால் இது அந்த மனுஷர்களையெல்லாம் பற்றிய ஒரு விரிவான நாவல் என்று சொல்லலாமா? எனில், எப்படி இதில் ஸ்டாலினும் குருஷேவும் வேறு சில நிஜ வரலாற்று ஆளுமைகளும் கலந்திருக்கிறார்கள்? இது நிஜம் பேசும் கதையா அல்லது கதை பேசும் நிஜமா? வரலாறு, கற்பனை இரண்டையும் நேர்த்தியாகக் குழைத்து வண்ணமயமான ஓர் உலகைத் தனக்கேயுரிய தனித்துவமான மொழியில் படைத்திருக்கிறார் நூலாசியர் என்.எஸ். மாதவன். ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ என்னும் தலைப்பில் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாவலை இரா. முருகன் ஜீவனுள்ள நடையில் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார். *** 2004ம் ஆண்டின் சிறந்த புத்தகம். - மலையாள மனோரமா காவியக் கற்பனை... மலையாள புனைவிலக்கியத் துறைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கிறார் என்.எஸ். மாதவன். - தி லிட்டில் மேகஸின் ‘கடவுளின் நாடு’ என்று கேரளா அழைக்கப்படுவது சரிதான் என்பது இந்நூலை வாசிக்கும்போது புரிகிறது. அவ்வாறு அழைக்கப்படுதற்கு அதன் அழகிய நிலப்பரப்பும் பசுமை கொஞ்சும் மலைகளும் நீர்நிலைகளும் மட்டும் காரணமல்ல, அங்கு வாழும் மக்களும் காரணம். - குஷ்வந்த் சிங்

பீரங்கிப் பாடல்கள் - Product Reviews


No reviews available