அவர்கள் இந்தியாவும் நம் இந்தியாவும்
அவர்கள் இந்தியாவும் நம் இந்தியாவும்
சாதி, மதம், அரசியல் உள்ளிட்ட பலவற்றை அடிப்படையாக வைத்து இன்றைய இந்தியாவை எப்படி நம் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் கட்டமைக்கிறார்கள் என்பதையும், ஆனால் உண்மையான இந்தியா தன் கலாசார பலத்துடனும் மரபுடனும் எப்படித் திகழவேண்டும் என்பதையும் B.R.மகாதேவன் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.
மிகக் கூர்மையான அவதானிப்புகள், அதற்கான கடுமையான விமர்சனங்கள் என்பதோடு நின்றுவிடாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் எந்த நோக்கில் இந்தியா பயணிக்க வேண்டும் என்பதையும் ஓர் உண்மையான இந்தியனாக அக்கறையோடு இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருப்பது சிறப்பு.
சிறுமைகளைக் கண்டு பயந்து ஒதுங்காமல், ‘தன் மீது எந்த முத்திரை குத்தப்பட்டாலும் கவலையில்லை, உண்மையை உரக்கச் சொல்லியே ஆகவேண்டும்’ என்ற கொந்தளிப்போடு, பல நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் பல கருத்துகள் தொடங்கி, சமீப காலங்களில் நிகழும் பல அரசியல்-சமூகப் பிரச்சினைகள் குறித்தும் ஆழமான அலசலுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்.
அவர்கள் இந்தியாவும் நம் இந்தியாவும் - Product Reviews
No reviews available

