அப்பா செய்த நாற்காலி
அப்பா செய்த நாற்காலி
எங்கள் அப்பா தச்சனில்லை ஆனால் அம்மாத் தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும். அவரிடம் சிறிய, பெரிய உளிகள், இழைப்புளி, மரச் சுத்தியல், பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள். மணல் போல் சொரசொரக்கி உப்புத் தாள் எல்லாம் இருந்தன. அவரால் துளிக் கூடக் கசியாத. கன்றுக்குட்டிகள் கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியான சின்ன மரத் தொட்டியைச் செய்துவிட முடியும்.என்னால் எப்போது நினைத்தாலும் வரைய முடியும், ஒரு கன்றுக்குட்டியையும் சின்ன மரத் தொட்டியையும் அவரிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.நான் எழுதுவதன் மூலமாகக் கூட, அப்படி ஒரே ஒரு ஒழுகாத, கசியாத சின்ன மரத்தொட்டி ஒன்றையாவது செய்துவிட முடியாதா என்றே முயன்றுகொண்டு இருக்கிறேன்.
- வண்ணதாசன்
அப்பா செய்த நாற்காலி - Product Reviews
No reviews available

