+ 2வுக்குப் பிறகு

0 reviews  

Author: K.சத்யநாரயணன்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

+ 2வுக்குப் பிறகு

 பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றமடையாத பெற்றோர்களும் கிடையாது.
மருத்துவம், பொறியியல், அறிவியல், சட்டம் போன்ற எண்ணற்ற துறை களில் இருந்து நமக்குச் சரியானதை எப்படித் தேர்ந்தெடுப்பது? எந்த அடிப்படையில் இதை நாம் செய்யவேண்டும்? வேலை வாய்ப்பை வைத்தா அல்லது நம் திறமைகளின் அடிப்படையிலா அல்லது விருப்பத் தின் அடிப்படையிலா?

அதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். என்னென்ன துறைகள் உள்ளன? ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்? எப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேரலாம்? ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங் களில் இணைந்து படிப்பது எப்படி? அயல் நாடுகளுக்குச் சென்று படிப்பது எப்படி? இன்னும் பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விரிவான பதில்கள் உள்ளன.

10வது, 11வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் வைத்திருக்கவேண்டிய ஓர் அத்தியாவசியமான கையேடு இந்நூல். பெற்றோர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் நல்ல வழிகாட்டியும்கூட.

கே. சத்யநாராயண், சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்ஸ், ஐஐடி மெட்ராஸில் எம்.எஸ்சி பிசிக்ஸ், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ் (பிசிக்ஸ்) பட்டம் பெற்றவர். உலகின் பிரபல கிரிக்கெட் இணையத்தளமான கிரிக் கின்ஃபோவை உருவாக்கியவர்களில் ஒருவர். கிழக்கு பதிப்பகத்தை உருவாக்கி, அதன் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இந்தியக் கல்வி குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

+ 2வுக்குப் பிறகு - Product Reviews


No reviews available