சிந்துபாத்தின் மனைவி

0 reviews  

Author: எஸ். ராமகிருஷ்ணன்

Category: நாடகங்கள்

Out of Stock - Not Available

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிந்துபாத்தின் மனைவி

இந்நூலில் மூன்று நாடகங்கள் உள்ளன.
விபரம் தெரிந்த நாள் முதல் ‘தினந்தந்தி’ பத்திரிகையில் வரும் சிந்துபாத்தை வாசித்து வருகிறேன். ஜோர்ஜ் லூயி போர்ஹே, அராபிய இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றில் இரண்டு சிந்துபாத்துகள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டபோதுதான் சிந்துபாத் என்ற கதாபாத்திரத்தின் மீள்புனைவு பற்றிய சாத்தியங்களை யோசிக்க ஆரம்பித்தேன். சிந்துபாத் கடற்பயணம் மேற்கொள்ளும்போது, அவன் மனைவி வீட்டில் என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற பொறிதான் இந்த நாடகம். பணம் சேர்ப்பதற்காக வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் சிந்து பாத்துகளே; உலகைப் பற்றி கற்பனை செய்துகொண்டு, தனது அறிவாற்றல் ஒடுங்க வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் அனைவரும் சிந்துபாத்தின் மனைவிகளே. இந்த இரு முனைகளுக்குள் இன்றைய நவீன வாழ்க்கையை, அதன் அபத்தங்களை, சவால்களை இந்த நாடகம் முன்வைக்கிறது. மற்ற இரண்டு நாடகங்களில், ‘சவரக் குறிப்புகள்’ நாடகத்தினுள் நாடகம் என்ற லூயி பிராண்டலோவின் வகையைச் சார்ந்தது. ‘பொய்விசாரணை’ அறிவியல் அறிஞர் புரூனோவின் விசாரணையை முன்வைத்து அறிவியலின் வரலாற்றை ஆராய்கிறது. இந்த மூன்று நாடகங்களும் வெவ்வேறு தளங்களில் மானுட வாழ்வின் நெருக்கடிகளைப் பேசுகின்றன. அவற்றின் ஊடாக மதமும் அதிகாரமும் எப்படி தனது ஒடுக்குமுறையை செயல்படுத்துகின்றன என்பதை சுட்டிக் காட்டுகின்றன.