மார்க்சிய தத்துவம் (பரிசல்)

0 reviews  

Author: நா.வானமாமலை

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மார்க்சிய தத்துவம் (பரிசல்)

'ஒரு தத்துவம், ஒரு பிரிவு மக்களைப் பற்றிக் கொள்ளுமானால், அப்பிரிவு போராட்டத்தின் வலிமைமிக்க ஆயுதம் ஆகும்' என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இந்த நூல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் இவர்களுடைய தத்துவக் கொள்கைானை விளக்கும் முயற்சியில் ஒரு சிறிய காணிக்கை. இந் நூலில் பொருள்முதல்வாதம், ஆன்மிகவாதம், இயக்கவியல் முதலிய சுருத்துகளை விளக்க இந்திய தத்துவங்களிலிருந்து உதாரணங்கள் தந்துள்ளேன். பல நாட்டு அறிஞர்கள் மார்க்சின் தத்துவம் பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு ஜெர்மன் அறிஞர் எழுதிய புத்தகத்தை நான் படித்தேன். அவர், அவரது நாட்டுந் தொழிலாளிகளுக்குப் புரியும்படி ஜெர்மன் உதாரணங்களைக் கொடுத்து கருத்துகளை விளக்கியுள்ளார். பூலிட்ஸர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், பிரெஞ்சு தத்துவம், வரலாற்றுத் துறைகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் தந்து மார்ச்சியக் கருத்தமைப்புகளையும், கருத்துகளையும் விளக்கியுள்ளார். மாரிஸ் கார் போர்த் என்னும் ஆங்கில மார்க்சிய அறிஞர், ஆங்கில உதாரணங்கள்தந்து மார்க்சியத் தத்துவத்தை விளக்கியுள்ளார். இந்தியாவில் இத்தகைய முயற்சி மிகக் குறைவு. அவ்வாறு முயற்சி செய்கிறவர்கள் மார்க்சியத்ளத, வேதரந்தத்திற்குச்
சமமாகவே ஆக்கிவிடுகிறார்கள். நாள் கருத்துகளை விளக்கும் பொழுது இந்திய உதாரணங்களைக் கொடுத்துள்னேன். தனியாகவும் இந்தியத் தத்துவ மரபின் தந்துவப்
போக்குகளையும் ஒரு பகுதியில் விளக்கியுள்ளேன். ஆனால் எங்கும் மார்க்சியத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் பொழுது வரலாற்றுண்மைகளைப் பின்பற்றியே எழுதியுள்ளேன், நான், கற்பிக்கும் முறையில் ஜியார்ஜ் பூலிட்ஸரைப் பின்பற்றியுள்ளேன். நவீன சோவியத் பாடப் புத்தகங்களிலிருந்தும், மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் நூல்களின் மேற்கோள்களிலிருந்தும் கருத்தையும், கருத்தமைப்புக்களையும் விளக்கியுள்ளேன். மார்க்சியத் தத்துவத்தின் முதல் பகுதி இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
அதை விளக்குவதே இந்த நூல்,

மார்க்சிய தத்துவம் (பரிசல்) - Product Reviews


No reviews available