இந்தியப் பிரிவினை

0 reviews  

Author: .

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  235.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்தியப் பிரிவினை

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம். ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழிந்து போயிருக்கிறது. மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால். நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. மொத்தம் இரண்டே ஜாதி. உயிர் வாழ விரும்புபவர்கள். உயிரை அழிக்க விரும்புபவர்கள். எதற்கும் கணக்குத் தெரியப்போவதில்லை. இறந்தவர்கள். தொலைந்தவர்கள். குழந்தைகளைத் தொலைத்த தாய்கள். சகோதரர்களைத் தொலைத்த சகோதரிகள். பிரிந்த நண்பர்கள். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த நிமிடம் வரை துடித்துக்கொண்டிருப்பவர்கள். துயர் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள். மனச்சிதைவுக்கு ஆளாகி இறந்துபோனவர்கள். இறந்து பிறந்த குழந்தைகள். பிறந்து இறந்த சிசுக்கள். இது அரசியல் வரலாறு மட்டுமல்ல. மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட

இந்தியப் பிரிவினை - Product Reviews


No reviews available