தாமிரபரணி கரையினிலே

0 reviews  

Author: முத்தாலங்குறிச்சி காமராசு

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தாமிரபரணி கரையினிலே

முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதியது.

பொதிகை மலையில் மிகவும் விஷேசமாக கருதப்படும் சொரிமுத்து அய்யனார் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மழை பெய்யாவிடில் இந்த சொரிமுத்து அய்யனார் கோயிலில் மாவட்ட ஆட்சித் தலைவரே சென்று வேள்வி நடத்துவார். தோளிலும் இடுப்பிலும் சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஆடிவரும் முதியவர்களும் பிரச்னைகளை மனதில் சுமந்து கொண்டு ஆடி அம்மாவாசையில் அய்யனை வணங்கி அருள்பெறும் பக்தர்களும் மிக மிக அதிகம். சொரிமுத்து அய்யனார் கோயில் காசிக்கு நிகரானது.இங்கு மகாலிங்கம் ஜோதி வடிவாக இருக்க காரணமான கதை.. சொரிமுத்து அய்யனார் சிறந்த பாதுகாவலார் என்பதை விளக்கும் வகையில் உள்ள கதை இது...

நெல்லையில் இருந்து 60கி.மீ. தொலைவில் பாபநாசம் அணை உள்ளது. அங்கிருந்து படகின் மூலம் வாணதீர்த்தம் செல்ல வேண்டும். வாணதீர்த்தத்தில் படி மீது ஏறிச் செல்லும் இடத்தில் ஒரு பெரிய குகை உள்ளது. இந்தக் குகை - அகத்தியர் வாசம் செய்யும் இடம். அகத்தியரின் வரம் தேடி நாம் செல்லும் இடம் குறித்துப்  பார்ப்போம்... சித்தர்களில் முதன்மையானவர் அகத்திய முனிவர்.'யோக தியானங்களில் ' மிகச் சிறப்பான பயிற்சி பெற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து சாதாரண மனிதனின் பார்வைக்குத் தென்படாத தன்மையை அடைந்து பொதிகை மலையில் தன்னை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதித்து அருள் புரிகிறார்....

தாமிரபரணி கரையினிலே - Product Reviews


No reviews available