புரட்சியில் இளைஞர்கள்

0 reviews  

Author: ,

Category: மார்க்சியம்

Out of Stock - Not Available

Price:  225.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புரட்சியில் இளைஞர்கள்

இந்த நூலில் 16பெயர்கள் உள்ளன.அவை இரநூறு,இரண்டாயிரம் ,பர கோடிப் பெயர்களாகவும் இருந்திருக்கலாம்.புரட்சியாளர்கள்,விஞ்ஞானிகள், கவிஞர்கள் ,கமிஸார்கள் ,கட்டுமானப் பணியினர்,சோதனை விமான ஓட்டிகள்-ஒவ்வொருவரும் இந்நூல்ன் ஆசியரும் பாத்திரங்களும் ஆகலாம்.இவர்கள் எல்லோருமே அரை நூற்றாண்டுக்குமுன் தொடங்கிய புதிய சமூகக் கட்டுமானத்தின் பிரமாண்ட வேலையில் பங்கேற்றியர்கள்.1920ஆம் ஆண்டு இளங்கம்யூனிஸ்டுகள் சங்கத்தின் மூன்றாவது காங்கிரஸில் வி.இ.லெனின் ஆற்றிய உரையுடன் நூல் தொடங்குகிறது.மக்ஸீம் கோர்க்கி ,லியனீத் லியோனவ் இருவரது கதைகளும் த்ஸெர்ழீன்ஸ்கி ,ரெய்ஸ்னர்,லிஸீனவா,செக்மரியோவ் ,கர்னாயோவ் முதலியோரின் நாட்குறிப்புகளும் கடிதங்களும் அதன் பின் தொடங்குகின்றன.இது வரலாற்றுப் பாட நூல் அல்ல.ஆனால் இதன் ஒவ்வொரு நூலிலும் வரலாறு உயிர்த்து இருக்கிறது.இது உணர்ச்சிகளைப் பயிற்றுவதற்கான ஆய்வுரை அல்ல.ஆனால் இங்கு வெளியிடப்பட்டுள்ள நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் அவசரமாக எழுதப்பட்டிருக்கும் வரிகள் காதலையும் வெறுப்பையும் நிலையுறுதியையும் சமரசமின்மையையும் துணிவையும் கோட்பாட்டு உறுதியையும் போதிக்கன்றன.உயிர் வழங்கியவர்களும் வாழ்பவர்களும் உள்நாட்டுப் போரிலும் மாபெரும் தேசபக்த யுத்தத்திலும் போரிட்டவர்களும் அமூர் மீதுள்ள கம்ஸமோல்ஸ்க் நகரையும் கராக்கூம் பாலைவனத்தில் புதிய அணைகளையும் நிருமித்தவர்களுமான இதன் பாத்திரங்கள் கொள்கை நம்பிக்கைக்கும் ஆண்மைக்கும் பற்றுதிக்கும் ஒளிவீசும் எடுத்துக்காட்டுகளாக என்றென்றும் முன்னணியில் இருப்பார்கள்.

புரட்சியில் இளைஞர்கள் - Product Reviews


No reviews available