நீர் வளர் ஆம்பல்

0 reviews  

Author: சுகிர்தராணி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீர் வளர் ஆம்பல்

அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண்ட இக்கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் உடலைத் தனதாக வரித்துக் கொண்டுள்ளன. உலகத்தை நேசிக்க உன்னால்தான் முடியும் என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கும் பறைதான் கொலைக்கருவி என்ற மூதாதை வார்த்தைகளுக்குமிடையே தொழிற்படும் கவிதைகள் இவை. அதனால்தான் தளக்கு வழங்கப்பட்ட விஷத்தை அருந்திவிட்டுப் புன்னகையுடன் காலிக்கோப்பையை நீட்டியபடியே இனியும் தருவதற்கு உங்களில் யாரும் மிஞ்சப்போவதில்லை என்று ரௌத்திரம் பழகுவதும் சாத்தியமாகின்றன சுகிர்தராணியின் சொற்களுக்கு. லிபி ஆரண்யா

நீர் வளர் ஆம்பல் - Product Reviews


No reviews available